திருவண்ணாமலையில் பிடிபட்ட 6 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம்நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

திருவண்ணாமலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி பிடிபட்ட 6 ஐம்பொன் சிலைகளை திருவண்ணாமலை போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி பிடிபட்ட 6 ஐம்பொன் சிலைகளை திருவண்ணாமலை போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் எமலிங்கம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க கடந்த மாதம் 21-ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல் முயன்றது. அப்போது அங்கு மறைந்திருந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 6 ஐம்பொன் சிலைகள், 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 7 பேரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 6 ஐம்பொன் சிலைகள், கார்கள், இருசக்கர வாகனங்களை வியாழக்கிழமை கும்பகோணத்துக்கு கொண்டுவந்த திருவண்ணாமலை போலீஸார், அவற்றை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சிலைகளை வழக்கு விசாரணை முடியும் வரை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com