சுவாமிமலையில் அக். 19-இல் கந்தசஷ்டி திருவிழா

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வரும் 19ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வரும் 19ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது.
அன்றைய தினம் மாலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. அக். 20ஆம் தேதி காலை சண்முகசுவாமி பரிவாரங்களுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை மாலை இருவேளையும் சுவாமி
வீதியுலாவும், 25ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 5 மணிக்கு சண்முக சுவாமி, அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குதலும், 6 மணிக்கு சூரசம்ஹாரமும், பின்னர் தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அக். 26ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் மாலை 7 மணிக்கு தேவசேனா திருக்கல்யாணமும், 27, 28 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ஊஞ்சல் திருவிழாவும், 30ஆம் தேதி சுவாமி மீண்டும் மலைக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com