திருவோணம் வட்டார விவசாயிகள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத்தின் ஒன்றியக்குழு கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத்தின் ஒன்றியக்குழு கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் ஆர்.ரெங்கசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் வி.கே.சின்னத்துரை, துணை தலைவர்கள் கே.ஆர். ராமசாமி, எம்.பி. செல்லத்துரை, துணை செயலாளர்கள் வ.பெ.தங்கராசு, கே. ஆறுமுகம்,  பொருளாளர் வீ. முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.பெரியசாமி, ஆர்.சரவணன், எம்.பெரியசாமி, எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்,  திருவோணம் பகுதி விவசாயிகள், கடந்த 2016 - 17 ஆம் ஆண்டுக்கான சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு பிரிமியம் செலுத்தி இருந்தனர். இந்நிலையில், மேற்படி விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும்  வறட்சியால்  பாதிக்கப்பட்டன. மேலும், மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்தன. பிறகு  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தன்மைக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கிட கடந்த 4. 07. 2017 இல் முதல்வர்  உத்தரவு பிறப்பித்தார். ஆனால் திருவோணம் ஒன்றியத்தில் சில விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீடு  நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் வழங்கப்படவில்லை.  எனவே, திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, அக்டோபர்  26 ஆம் தேதி திருவோணம் வழியாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூருக்கு வருகை தரும், முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com