அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு வெள்ளிக்கிழமை பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு வெள்ளிக்கிழமை பல்வேறு கட்சிகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் பொதுச் செயலர் இரா. ஜெயக்குமார், அமைப்புச் செயலர் இரா. குணசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
மதிமுக சார்பில் பொதுச் செயலர் வைகோ தலைமையில் துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் கணேசமூர்த்தி, மல்லை சத்யா, மாவட்டச் செயலர் கோ. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் கீழவாசல் காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அண்ணா சாலை வழியாக அண்ணா சிலைக்குச் சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில், திமுக தெற்கு மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் தேர்தல் பணிக் குருத் தலைவர் எல். கணேசன், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வர்த்தகர் அணி மாநிலச் செயலர் சி.நா.மீ. உபயதுல்லா, சி. இறைவன், தலைமைக் குழு உறுப்பினர் து.செல்வம், மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம், இளைஞரணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் சண். ராமநாதன், மருத்துவர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் தலைமையில் சிவகங்கை பூங்காவில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு அண்ணா சிலைக்குச் சென்று மாலை அணிவித்தனர். பகுதிச் செயலர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், தினகரன் ஆதரவாளர்களான மா. சேகர், துரை. கோவிந்தராஜன், கோவி. மனோகரன், வேலாயுதம், செந்தில் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
கும்பகோணத்தில்...கும்பகோணம் நகர திமுக சார்பில் மகாமககுளத்தின் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதே போன்று தாராசுரம் கடைத்தெருவில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ அன்பழகன், நகரச் செயலாளர் தமிழழகன், ஒன்றியச் செயலாளர்கள் கணேசன், அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று கும்பகோணம் அதிமுக நகர, ஒன்றியம் சார்பில் கும்பகோணம் பிர்மன் கோயில் தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராம.ராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.வி.எஸ்.செந்தில், ஜெயலலிதா பேரவை செயலாளர் அயூப்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டையில் அதிமுக, திமுக, மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதிமுகவினர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெரியகடை வீதியிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக நகரச் செயலர் சுப.ராஜேந்திரன், ஒன்றியச்செயலர் பி.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com