குடந்தை முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் பீமன் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் பீமன் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையதும், காசியிலும் வீசம் அதிகம் என்று அழைக்கப்படும் பாஸ்கர சேத்திரமாகத் திகழும் இக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜை தொடங்கியது.
மாலை முதல் கால யாகசாலை பூஜையும், திருமுறைப்பாராயணமும், மூலவ மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு கோயில் விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com