குடந்தை ராமசாமி கோயிலில் உறியடி திருவிழா

கும்பகோணம் ராமசாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கும்பகோணம் ராமசாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தென்னக அயோத்தி எனப்போற்றப்படும் இக்கோயில் கும்பகோணத்தில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருக்கோயில்களுள் ஒன்று. மேலும் மகாமகம் தொடர்புடையை வைணவ கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையானது இக்கோயில். சிறப்புடைய இக்கோயில் மூலஸ்தானத்தில் சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன், ராமனின் வில் மற்றும் தன் வில்லை ஏந்தி இருக்க, பரதன்குடை சமர்பிக்க, அனுமன் ஒரு கையில் வீணை மறு கையில் ராமாயண சுவடியை ஏந்திய நிலையில் பட்டாபிஷேக கோலத்தில் ராமரும், சீதையும் காட்சி அளிக்கின்றனர். வேறு எந்த திவ்ய தேசத்திலும் காணமுடியாத சிறப்புடைய இக்கோயிலின் வெளிமண்டபத்தில் 64-க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைபாடுகளுடன் கலைக்கோயிலாகவும், உள்பிரகாரத்தில் ராமாயண ஓவியங்களுடனும் அமைந்துள்ளன.
பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. அதையடுத்து ராமசாமி கோயிலில் வியாழக்கிழமை இரவு உறியடி உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக ராமசாமி கோயிலிலிருந்து உற்சவர் ராமபிரான் கோயில் சன்னதி தெருவில் எழுந்தருளினார். அப்போது பெரிய கோயில் என்றழைக்கப்படும் சாரங்கபாணி சுவாமி கோயிலிலிருந்து ஆராவமுதனும் எழுந்தருளினார்.இருகோயில் மூர்த்திகளும் எழுந்தருளியவுடன் உறியடி உற்சவம் நடைபெற்றது. யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று உறியடி நடத்தினர். அதைத் தொடர்ந்து ராமர் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com