ஜாக்டோ- ஜியோ காத்திருப்புப் போராட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தையொட்டி, தஞ்சாவூரில் மூன்றாவது நாள் காத்திருப்புப் போராட்டத்தை பனகல் கட்டட வளாகத்தில் மேற்கொண்டனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தையொட்டி, தஞ்சாவூரில் மூன்றாவது நாள் காத்திருப்புப் போராட்டத்தை பனகல் கட்டட வளாகத்தில் மேற்கொண்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய முறையை அமல்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக் குழுக் குறித்த மத்திய அரசின் பரிந்துரையை நடமுறைப்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அளவில் ஜாக்டோ - ஜியோ (தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செப். 7-ஆம் தேதி தொடங்கினர்.
இப்போராட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரகம் முன் தொடங்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் இரவு வரை நீடித்தது. இதுதொடர்பாக சுமார் 75 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை வரை ஆட்சியரகம் முன் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உள்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, பனகல் கட்டட வளாகத்துக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சென்று காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர், மாநில அளவில் போராட்டம் தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, தஞ்சாவூரிலும் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com