தீபாவளியை முன்னிட்டு : கோ-ஆப் டெக்சில் 30% தள்ளுபடி விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் கோ-ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் கோ-ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர், ஆட்சியர் தெரிவித்தது:
தஞ்சாவூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், அரியலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 19 கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த ஆண்டில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ. 11.11 கோடி விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டில் ரூ. 14 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை திட்டத்தின் கீழ் ரூ. 1.02 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு ரூ. 1.35 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ. 3.43 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய இலக்கு ரூ. 4.85 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு காஞ்சிபுரம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், சுங்கடி சேலைகள், செட்டிநாடு சேலைகள், காஞ்சி பருத்தி சேலைகள், கூறைநாடு சேலைகள், நெகமம் பருத்தி சேலைகள், லினன் ஆயத்த சட்டைகள், ஜீன்ஸ் டாப்ஸ், மீரட் போர்வைகள் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்காகத் தமிழக அரசு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறைப் பணியாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப் டெக்ஸ் 30 சதவீதத் தள்ளுபடியுடன் வட்டியில்லா சுலப கடன் வசதி அளிக்கிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் இரா. சுரேஷ்குமார், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) எம். அன்பழகன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com