நெல் பயிருக்குக் காப்பீடு செய்ய அழைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ராபி பருவ நெல் பயிருக்குக் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ராபி பருவ நெல் பயிருக்குக் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அழைப்பு விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்துக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:
ராபி பருவ நெல் 2-க்கான (சம்பா, தாளடி) அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் விதைக்க முடியாத நிலைக்கு அக். 25-ஆம் தேதி, விதைப்பு மற்றும் நடவு பொய்த்து போனதற்கு நவ. 25-ஆம் தேதியும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புக்கு 2018, மார்ச் 25-ஆம் தேதியும் காப்பீடு செய்ய இறுதி நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள தகவல் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் இது குறித்த விவரங்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுவாக, ராபி பருவ நெல் 2-க்கான பயிர் காப்பீட்டில்
சேர கடைசி நாள் நவ. 30-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நெல் 2 சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு ஏக்கரூக்கு ரூ. 402 பரிமியம் செலுத்தி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் ஆர். கிருஷ்ணகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அ. ஜஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com