மக்கள் நீதிமன்றம்: 6 வழக்குகளில் ரூ. 2.30 லட்சத்துக்கு தீர்வு

பாபநாசம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வங்கி சார்பில் லோக் அதாலத் எனும் வங்கி மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வங்கி சார்பில் லோக் அதாலத் எனும் வங்கி மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியுமான எஸ். ராஜசேகர் வழிகாட்டுதலின்படியும், ஓய்வு பெற்ற சார்பு நீதிபதி எஸ். ராஜேந்திரன் தலைமையிலும், திருக்கருகாவூர் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை சார்பில் வங்கி வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் வங்கி சார்பில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட கல்விக் கடன், விவசாயக் கடன், வாகனக் கடன், உழவு இயந்திரங்கள் வாங்குவதற்கான கடன் மற்றும் நகைக் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று பகுதி மட்டும் செலுத்தி மீதித்தொகையை திருப்பி செலுத்த முடியாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ள 83 பேர்களுக்கு வங்கி லோக் அதாலத்தில் கலந்து கொண்டு பயனடைவதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிகள் வாராக் கடன்கள் மீது விசாரணையும், பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் வசூலிக்க உத்தரவானது.
வழக்குரைஞர்கள் ஜெ. பாலச்சந்திரன், எம். அழகர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் பவுல் தேவராஜ் சுதர்சன், உதவி மேலாளர்கள் சுகன்யா, துஷார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் (பொ) ஏ. மனோகரன், சட்டப்பூர்வ தன்னார்வலர்கள் எஸ்.பி. ராஜேந்திரன், எஸ். தனசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com