காவல் துறை சார்பில் பாபநாசத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் தனியார் திருமண மண்டப வளாகத்தில் பாபநாசம் காவல் துறை மற்றும் பொதுமக்கள், வணிகர் சங்கம், ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டவை பங்கேற்ற பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூ

பாபநாசம் தனியார் திருமண மண்டப வளாகத்தில் பாபநாசம் காவல் துறை மற்றும் பொதுமக்கள், வணிகர் சங்கம், ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டவை பங்கேற்ற பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் பி. செல்வராஜ் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் நாகரெத்தினம், ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பாபநாசம் நகரில் குற்றங்களை தடுப்பது தொடர்பாக தங்களது கருத்துகளை அனைத்துச் சங்க பிரதிநிதிகளும் விளக்கினர்.
இதைத் தொடர்ந்து, பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. செல்வராஜ் பேசும்போது, பாபநாசம் கடைவீதியில் உள்ள முக்கிய இடங்கள் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கி இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் கேமராக்களை மறைக்கும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்க கூடாது என்றும், இதுதொடர்பாக அனைத்துத் தரப்பினரும் காவல் துûறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com