மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்த வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.


மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் இச்சங்கத்தின் மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்க வேண்டும். தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும். பூதலூர், திருவையாறு, பேராவூரணி உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் அலுவலகங்களை மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல எளிதாகத் தரைத்தளத்துக்கு மாற்ற வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை இல்லை என மறுக்காமல் வழங்க வேண்டும். வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன் உதவி வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு பணி இடங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும் பருவகால மாற்றுத்திறனாளிகள் பணியாளர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டுக்கு எஸ். சிவப்ரியா தலைமை வகித்தார்.
இம்மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஏ. பஹாத் முகமது, மாவட்டச் செயலராக பி.எம். இளங்கோவன், மாவட்டப் பொருளாளராக சிவப்ரியா, துணைத்தலைவர்களாக கே. கிருஷ்ணமூர்த்தி, பி. சங்கிலிமுத்து, சி. கணேசன், சுகுமார், ரவி, துணைச் செயலாளர்களாக சி. ராஜன், ராமச்சந்திரன், கணேஷ், செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் சாமி.நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், ஒன்றியச் செயலர் எம். மாலதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்செல்வி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன், மாணவர் சங்க மாவட்டச் செயலர் அரவிந்த்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com