மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லம் தேவை

மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லம் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மாநில மூத்த குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்பு


மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லம் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மாநில மூத்த குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இக்கூட்டமைப்பின் 22 ஆம் ஆண்டு நிறைவு விழா, பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டந்தோறும் முதியோர்களுக்குத் தனியாக முதியோர் இல்லம் என அரசு சார்பில் நிர்வகிக்கப்பட வேண்டும். தனியாக வீட்டில் வசிக்கும் முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட முதியவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை உற்பத்தி விலையில் வழங்க அம்மா மருந்தகங்கள் முன்வர வேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் முழு மதுவிலக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களைப் போர்க்கால அடிப்படையில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டி.வி. ராமமூர்த்தி தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் எஸ்.பி. அந்தோணிசாமி, பொதுச் செயலர் கோ. ராஜேந்திரன், துணைத் தலைவர் யு. ஜோசப், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com