பேராவூரணி அருகே தீவிபத்தில் 7 கடைகள் எரிந்து சேதம்

பேராவூரணி அருகே உணவு விடுதியில் சனிக்கிழமை  நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தினால் 6 கடைகள் எரிந்து சேதமடைந்தன. 

பேராவூரணி அருகே உணவு விடுதியில் சனிக்கிழமை  நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தினால் 6 கடைகள் எரிந்து சேதமடைந்தன. 
புதுக்கோட்டை மாவட்டம்,  நெடுவாசல் கிராமத்தைச் சேந்தவர் மணிகண்டன். இவர், திருச்சிற்றம்பலம் அறந்தாங்கி சாலையில் உணவுவிடுதி நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இவரது கடையின் அடுப்பில் முழுமையாக அணைக்காமல் விடப்பட்ட தீக்கங்குகள் காற்றின் வேகத்தால் அவரது கடையின் மேற்கூரையில் பட்டதில் கூரை தீப்பற்றியதாக தெரிகிறது.  அப்போது,  மணிகண்டன் கடையிலிருந்த சிலிண்டர் வெடித்ததால் பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் தீ மள மளவென பரவியது.
இந்தச் சம்பவத்தில் திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை,  திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் இருசக்கர வாகன பட்டறை மற்றும் பெட்டிக்கடை, பொக்கன்விடுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் காய்கறி கடை, புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மர பர்னிச்சர் கடை, அருகில் இருந்த மர இழைப்பகம் (இது மதுக்கூரை சேர்ந்த மாரிமுத்து  என்பருக்கு சொந்தமானது) ஆகிய கடைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் மர இழைப்பகத்தில் உள்ள இயந்திரங்கள், விலை உயர்ந்த மரக்கட்டைகள், ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணம்,  பர்னிச்சர் கடையில் திருமண ஆர்டர்களுக்காக செய்து வைக்கப்பட்டிருக் கட்டில் பீரோ உள்ளிட்ட பொருட்கள், அருகிலிருந்த திருமண மண்டபம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.  
தீ விபத்தில் 7 கடைகளில் இருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com