வெள்ளச் சேத மதிப்பீடு:  அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.
கும்பகோணம் அருகே அணைக்கரை விநாயகர் தெருவில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தாழ்வான விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை ஆய்வு செய்தார். 
பின்னர், புதுக்குடி கிராமத்தில் ஆற்றங்கரையோர தாழ்வான விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதைப் பார்வையிட்டார். சேத மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.பின்னர், கும்பகோணம் அருகே குடிதாங்கியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும், வீரமாங்குடி ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தையும் பார்வையிட்டார்.
அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) ஏ. ஜஸ்டின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com