தஞ்சையில் நாளை நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே  உள்ள குருவிக்கரம்பையைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர்  க. மாணிக்கவாசகத்தின்

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அருகே  உள்ள குருவிக்கரம்பையைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர்  க. மாணிக்கவாசகத்தின் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (ஆக. 25) மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மஹாலில் நடைபெறுகிறது.
ஓய்வு பெற்ற டிஎஸ்பி  க. மாணிக்கவாசகம்,  தன் பணிக்காலத்தில் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்களை தொகுத்து 55 சிறு கதைகளாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா தஞ்சை தீர்க்க சுமங்கலி மஹாலில்  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பெ. சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் நடைபெறுகிறது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் நூலை வெளியிட,  ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். நாகமுத்து பெற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில் ஓய்வுபெற்ற தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் க.கணேசன், ஓய்வு பெற்ற இணை ஆணையர் வீ. சித்தண்ணன்,  ஓய்வுபெற்ற டிஎஸ்பி சி. ராஜமாணிக்கம், ஓய்வு பெற்ற துணை ஆணையர் பெ. மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். ஓய்வு பெற்ற டிஎஸ்பி கவிஞர் அரு.உலகநாதன் விழாவை தொகுத்து வழங்குகிறார். நூலாசிரியர் க. மாணிக்கவாசகம் ஏற்புரை மற்றும் நன்றியுரையாற்றுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com