திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்

: கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவையொட்டி திருத்தேரோட்டம்

: கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநாகேசுவரத்தில் நவகிரக தலங்களில் ஒன்றான ராகு தலமாக போற்றப்படும் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு நாககன்னி, நாகவள்ளி என இரு தேவியருடன் தனிசன்னிதி கொண்டு ராகு பகவான் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இங்கு ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான கார்த்திகை கடை ஞாயிறு அன்று பெருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நவ. 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இதனிடையே, 4-ம் தேதி ஓலைச்சப்பரமும், 6-ம்தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை சுவாமி அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் மங்கள வாத்தியம், அதிர்வேட்டுகள் முழங்க தேர் வடத்தை ஏராளமான பக்தர்கள் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்த தேர் மாலையில் நிலையை அடைந்தது. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி சூரியகுளத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com