திருவையாறில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி

திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவர்களுடைய சொந்த மாவட்டத்தில் பணிபுரிய பணி மாறுதல் வழங்க வேண்டும்.  கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில்  மின்சாரம், கழிப்பறை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளைச் செய்து தரவேண்டும். 2013 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் அனைவரும் இணையதளத்தின் மூலம் சான்றுகள் பெறுகின்றனர். 
இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் செலவு செய்கின்றனர். எனவே, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையவழி வசதியை அரசு ஏற்படுத்தி, அச்செலவை ஏற்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சங்கத்தின் வட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே செவ்வாய்க்கிழமை மாலை காங்கிரஸ் கட்சியினர் ஏஐசிசி உறுப்பினர் கே.மகேந்திரன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக்  கொண்டாடினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com