பந்தநல்லூர் கோயில்எழுத்தரிடம் மீண்டும் விசாரணை: மாணிக்கவாசகர் சிலை பறிமுதல்

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் தலைமை எழுத்தரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தி, மாணிக்கவாசகர் சிலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் தலைமை எழுத்தரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தி, மாணிக்கவாசகர் சிலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பாக இருந்த ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயில், கீழமணக்குடி காசிவிஸ்வநாதர்கோயிலுக்குரிய 6 ஐம்பொன் சிலைகள் மாயமானது.
இதுதொடர்பாக பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் தலைமை எழுத்தர் கே. ராஜா (37) என்பவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த நவம்பர் மாதம் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த பிப். 2 ஆம் தேதி ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த போது, அவரது வீட்டில் பித்தளையால் ஆன நடராஜர் சிலை ஒன்று இருப்பதை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் பிப். 5 ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து ராஜாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருந்ததால், பிப். 8 ஆம் தேதி ராஜாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரித்த போது, பசுபதீஸ்வரர் கோயிலில் ஒன்றரை அடி உயரத்தில் பித்தளையால் ஆன மாணிக்கவாசகர் சிலை இருப்பதாக கூறியுள்ளார்.
போலீஸார் இந்தச் சிலையை பறிமுதல் செய்து, சிலையை எப்படி, யார் கொண்டு வந்தது?, வேறு ஏதேனும் சிலைகளை மாற்றுவதற்காக வந்ததா என்ற கோணத்தில் விசாரித்து, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com