தேசிய விளையாட்டுப் போட்டி: சாஸ்த்ரா வெற்றி

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தச் சுழற்கோப்பையை வென்றது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தச் சுழற்கோப்பையை வென்றது.
இப்பல்கலைக்கழகத்தில் கொ லோஸ்சியம் 2018 என்கிற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி பத்தாம் ஆண்டாக பிப். 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், இறகுப்பந்து, கைப்பந்து, சதுரங்கம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கையுந்துபந்து, ஆணழகன் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில், 50-க்கும் அதிகமான கல்லூரிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
இப்போட்டிகளில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்கள் கால்பந்து, டென்னிஸ், ஆணழகன் ஆகிய போட்டிகளில் முதலிடத்தையும், இறகுபந்து, கையுந்துபந்து, பெண்கள் சதுரங்கம் ஆகிய போட்டிகளில் இரண்டாமிடத்தையும், ஆண்கள் சதுரங்கம், டேபிள் டென்னிஸ், பெண்கள் கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளில் மூன்றாமிடத்தையும் கைப்பற்றி, ஒட்டுமொத்தமாக 62 புள்ளிகளைப் பெற்று சிறந்த அணிக்கான சுழல் கோப்பையை வென்றது. ஸ்ரீசிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த வீரர், வீராங்கனைகள் மொத்தமாக 40 வெற்றி புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், கோவை காருண்யா பல்கலைக்கழக வீரர்கள், வீராங்கனைகள் 32 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றனர். 
பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக முதன்மையர் எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய பெண்கள் கூடைப்பந்து அணித் தலைவர் அனிதா பால்துரை பரிசுகள் வழங்கினார். பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com