பிப். 20 - 22 தேதிகளில் கால்நடை, கோழிகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கால்நடை, கோழிகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் பிப். 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கால்நடை, கோழிகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் பிப். 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மையத் தலைவர் அ. ஜெகதீஸ்வரன் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கால்நடை, கோழிகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சியை பிப். 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடத்தவுள்ளது. இதில், 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முன் பதிவுக்கு 9047157859 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் ரூ. 100 மட்டுமே. 
இதில், கலந்து கொள்பவர்களுக்கு மூலிகை மருத்துவம் குறித்த புத்தகம், மூலிகை நாற்றுகள் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com