வருவாய்த்துறை பதிவேடுகளை  இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

வருவாய்த்துறையில் உள்ள பதிவேடுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வருவாய்த்துறையில் உள்ள பதிவேடுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான நுகர்வோர் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் சுந்தரவிமலநாதன்  அனுப்பியுள்ள மனு விவரம்: 
வருவாய்த்துறையிலுள்ள அ பதிவேடுகள் புல வரைபடங்கள், 1850 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருவதால், அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொது ஆவணங்களாக பொது மக்கள் பயன்படுத்து வகையில் எளிமைப்படுத்திட வேண்டும்.  1850 முதல் 1863 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட வருவாய்த்துறை ஆவணங்கள் கிடைப்பதை உறுதிபடுத்திட வேண்டும்.
பத்திர பதிவின் போதே, ஒவ்வொரு பதிவிற்கும் பட்டா பெயர் மாற்றத்திற்கேற்ப உரிய கட்டணத்தினை பொது மக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் செலுத்தி விடுகின்றனர். ஆனால் தனியாக பட்டா மற்றும்  பெயர் மாற்றம் என்ற பெயரில் வசூல் செய்யப்படுவது ஊழலுக்கு வழிவகுக்கிறது. 1925 ஆம் ஆண்டிற்கு முன் உள்ள வெள்ள கரை புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, நீரிநிலைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் பஞ்சமி நில விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பொது பயன்பாட்டிற்கு கிடைக்க வழிவகை செய்திட வேண்டும்.
முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி, சமூகபாதுகாப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இ சேவை மையங்களில் ஆவணங்களுக்குரிய கட்டணம், எவ்வளவு என்பதை தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும். 
இ சேவை மையத்தில் புகார் எண், மின்னஞ்சல் முகவரி பார்வைக்கு வைக்க வேண்டும்.  அரசு கேபிள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச தொலை பேசி எண் தேவை. அரசு கேபிள் டிவி நிறுவன செட் ஆப் பாக்ஸ் வசதி பெற இணையதளத்தில் நுகர்வோர் பதிவு செய்யும் வசதி தேவை. 2016 ஆம் ஆண்டு வறட்சி நிவாரண பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com