திருவையாறில் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி

மகா சிவாராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் 16 ஆம் ஆண்டு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.

மகா சிவாராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் 16 ஆம் ஆண்டு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.
மகா சிவராத்திரி நாளான செவ்வாய்க்கிழமை சென்னை ஸ்ரீஹரி நாட்டியாலயா குழுவினர், தஞ்சை கிட்டப்பா பிள்ளை பெயர்த்தி குழுவினர், மும்பை ஸ்வேதா குழுவினர் ஆகியோரின்  பரதநாட்டியம் நடைபெற்றது. இதில்,  ஏராளமான நாட்டிய ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா புதன்கிழமையுடன் முடிவடைந்தது. விழா ஏற்பாடுகளை ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மதிப்பியல் தலைவர் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com