263 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் காரீப் பருவத்துக்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 263 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் காரீப் பருவத்துக்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 263 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
விவசாயிகளுக்கு நெல்லுக்கான ஆதார விலையாக மத்திய அரசு அறிவித்துள்ள ஏ கிரேடு (சன்ன) ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,590, பொது ரகத்துக்கு ரூ. 1,550 மட்டுமல்லாமல், தமிழக அரசின் பங்களிப்பாக ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ஏ கிரேடுக்கு ரூ. 70-ம், பொது ரகத்துக்கு ரூ. 50-ம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ஏ கிரேடுக்கு ரூ. 1,660-ம், பொது ரகத்துக்கு ரூ. 1,600-ம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 35,520 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் நெல்லுக்குரிய தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் பண பரிமாற்றம் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்குப் பணமாகவோ அல்லது நெல்லாகவோ கொடுக்கத் தேவையில்லை.
கொள்முதல் பணியாளர்களால் பணம் கோரப்பட்டால், முதுநிலை மண்டல மேலாளரை 9443732305, துணை மேலாளர்களை 7708070882 (தஞ்சாவூர்), 9942381285 (கும்பகோணம்), 8838283516 (பட்டுக்கோட்டை) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com