தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு: 9 கடைகளுக்கு அபராதம்

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து தாராசுரம், கன்னியாக்குறிச்சி பகுதிகளில் பொது சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதில் 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து தாராசுரம், கன்னியாக்குறிச்சி பகுதிகளில் பொது சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதில் 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
கும்பகோணம் அருகே தாராசுரம் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் விஜயேந்திரன், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக், ஆனந்த் ஆகியோர் ஈடுபட்டனர்.
ஆய்வின்போது,  புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்தும் விளம்பரத் தட்டிகளை வைத்திருந்த 3 கடைகளுக்கு ரூ.200 வீதம் ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது. 
இதேபோல,  மதுக்கூர் அருகே கன்னியாக்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 6 கடைகளுக்கு ரூ.900 அபராதம் விதிக்கப்பட்டது. மேற்கண்ட இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர்.
ஆய்வின்போது,  அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் புகையிலை போன்றவற்றை விற்பனை செய்யக் கூடாது. 
கடைக்கு வருபவர்கள் பார்வையில் படும்படி புகையிலை மற்றும் புகையிலை பொருள்களை வைக்கக் கூடாது. புகை பிடிப்பதை தூண்டும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது,  ஒவ்வொரு கடைகளிலும் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற விளம்பர பலகை அவசியம் வைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு 300 அடிக்குள் புகையிலை பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com