தஞ்சையில் காவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட அளவில் போலீஸ், பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக கடந்த 11-ஆம் தேதி முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதன் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறைவுப் போட்டிகளும், காவலர் பொங்கல் விழாவும் நடத்தப்பட்டன.
இதனை மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. வரதராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் அனைத்து நிலைகளிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தமிழரின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றனர். 
பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினர். தொடர்ந்து, கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம், உறியடி, கபடி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. 
பின்னர், அங்கு மாட்டுவண்டி வேடிக்கையும், ஜல்லிகட்டு மாடுகளின் கண்காட்சியும் நடைபெற்றது. அதீத பணிச்சூழலில் பணிபுரியும் காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன், சக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.ஏ. நக்கீரன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com