மதுக்கடைகளுக்கு பூட்டு போட முயன்ற 31 பேர் கைது

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டு போட முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியினர் 31 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டு போட முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியினர் 31 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமாக ஜனவரி 12 ஆம் தேதியில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என இந்து மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அன்றைய தினம் மதுக்கடைகள் திறந்து இருந்தால் பூட்டு போட்டு மூடுவோம் எனவும் அக்கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அறிவித்தபடி, மாநகர தலைவர் பாலகுமார் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் தஞ்சாவூர் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவதற்காக அப்பகுதியில் வெள்ளிக்கிழமை திரண்டனர். 
தொடர்ந்து விவேகானந்தர் பிறந்தநாளில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியபடி, டாஸ்மாக் கடையை நோக்கிச் சென்றனர். இவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி, மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி உள்பட 18 பேரை கைது செய்தனர்.
கும்பகோணத்தில்...: இதேபோல, கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவதற்காக பூட்டுகளுடன், விவேகானந்தர் போல வேடமணிந்தும் மாவட்ட செயலாளர் பாலா தலைமையிலான இந்து மக்கள் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திய போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பூட்டு போட முயன்ற இந்துமக்கள் கட்சியினர் 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com