நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்குப் பயிற்சி

பட்டுக்கோட்டை ஒன்றியம், செம்பாளூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை செயல் விளக்கப் பயிற்சி

பட்டுக்கோட்டை ஒன்றியம், செம்பாளூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை வேளாண் மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நெல் சாகுபடியில் உள்ள புதிய ரகங்கள், அவற்றின் பூச்சி நோய் எதிர்ப்புத் தன்மை ஆகியன குறித்து விளக்கினார். நெற்பயிர் அறுவடைக்குப்பின் மாற்றுப் பயிராக உளுந்து, நிலக்கடலை சாகுபடி செய்து விவசாயிகள் மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் ஆர்.கார்த்திகேயன், நெற்பயிரின் பாதுகாப்பு முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகளின் அனைத்து தொழில்நுட்ப சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
மாற்றுப் பயிர் சாகுபடி குறித்து வேளாண்மை அலுவலர் ச.மாலதியும், நெற்பயிர் சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகளை கையாளும்போது, எளிய முறையில் பொறிகளைப் பயன்படுத்தி நஞ்சு இல்லாத உணவு உற்பத்தி செய்வது குறித்து வேளாண்மை அலுவலர் சா.சங்கீதாவும் எடுத்துக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பி.ராஜ்குமார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com