ராபி பருவ நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடும்முறை: வேளாண் அதிகாரி விளக்கம்

பேராவூரணி வேளாண்மை கோட்டத்தில் மார்கழி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தெரிவித்துள்ளதாவது

பேராவூரணி வேளாண்மை கோட்டத்தில் மார்கழி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தெரிவித்துள்ளதாவது:
மார்கழி பட்ட நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதற்கு இதுவே ஏற்ற தருணம். ஜிப்சம் இடுவது ஒரு இன்றியமையாத மேலாண்மையாகும். ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ வீதம் ஜிப்சம் இடுவது மிகவும் அவசியம். 200 கிலோவை அடியுரமாகவும் மீதமுள்ள 200 கிலோவை 40&45 நாளில் பூக்கும் தருணத்தில் இட்டு களைகொத்தி பயிரைச்சுற்றி நன்கு மண் அணைக்க வேண்டும்.
ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற நோய்களை வெகுவாக குறைக்க முடியும். பூச்சிநோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஜிப்சம் விட்டு களைகொத்தி மண் அணைப்பதால் கால்சியம் மற்றும் கந்தக சத்து குறைபாடுள்ள நிலங்களில் நல்ல பலன் கிடைக்கும். ஜிப்சம் விடுவதால் நன்கு விழுதுகள் இறங்கி நிலக்கடலை பொக்கற்ற நல்ல எடையுடன் கூடிய திரட்சியான பருப்புகள் கிடைக்கும். எனவே, மார்கழி பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜிப்சமிட்டு அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com