அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் சிறுவர்கள் இல்லத்துக்கு நிதியுதவி

தஞ்சாவூர் ஐக்கிய பொருளாதார அறக்கட்டளை நடத்தும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்துக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னதான நிதியுதவியாக ரூ.10 ஆயிரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.  

தஞ்சாவூர் ஐக்கிய பொருளாதார அறக்கட்டளை நடத்தும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்துக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னதான நிதியுதவியாக ரூ.10 ஆயிரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.  
 லயன்ஸ் சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ், லயன்ஸ் சங்க பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் நரேஷ் அகர்வால் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகமது முகைதீன் வழங்கிய ரூ.10 ஆயிரம் நிதியை தஞ்சாவூர் ஐக்கிய பொருளாதார அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் அப்துல்ஹமீது பெற்றுக் கொண்டார்.
   லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல்ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ.அப்துல் ஹமீது, மக்கள் தொடர்பு அலுவலர் நிஜாமுதீன், உறுப்பினர் அப்துல் ஜலீல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com