ஆயத்த ஆடை  வடிவமைப்பு பயிற்சி

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கி வரும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் சுய

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கி வரும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் சுய வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி பெறும் மகளிருக்கான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மையத்தின் நிர்வாக பொறுப்பாளர் இந்திரா கெளரி, பயிற்சி மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். 
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) மணிவேல், சுயவேலைவாய்ப்பு பயிற்சியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் குறித்தும், தையல் பயிற்சி பெறுபவர்கள் பயிற்சி முடிந்தவுடன் தையல் கடை அல்லது ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றி முன் அனுபவம் பெற்றுக்கொள்வது குறித்தும், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்கி பேசினார். 
இதில், வேலைவாய்ப்புத் துறை உதவி அலுவலர் சரவணன், தையல் மற்றும் தையல் ஆரி வேலைப்பாடுகள் பயிற்சி பெறும் பெண்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com