கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம்: அமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு அனுமதி பெற்று தந்த வேளாண் அமைச்சர் இரா. துரைக்கண்ணு, நடவடிக்கை

பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு அனுமதி பெற்று தந்த வேளாண் அமைச்சர் இரா. துரைக்கண்ணு, நடவடிக்கை மேற்கொண்ட தஞ்சை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோரை அரியலூர் மாவட்ட விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 
அரியலூர் மாவட்டம்,  மேலராமநல்லூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள ஒரு தீவு கிராமம்.  
இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் தங்கள் பணிக்காக பாபநாசம் பகுதிக்கு வந்து செல்லவும்,  விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை  பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தைப்படுத்தவும் கொள்ளிடம் ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். 
கொள்ளிடம் ஆற்றில் முறையான பாலம் இல்லாததால்,  இந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.  குறிப்பாக, மழைக்காலங்களில் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
எனவே, கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,  வேளாண் அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு பரிந்துரையின் பேரில் தஞ்சை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நடவடிக்கை மேற்கொண்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர்-தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மேலராமநல்லூர் -குடிகாடு கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.56 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்நிலை பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி பெற்றுத் தந்தனர். 
இதற்காக அரியலூர் மாவட்ட விவசாயிகள் அமைச்சர், ஆட்சியரை பாபநாசத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com