போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழக ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி தஞ்சாவூர் கரந்தையில் உள்ள போக்குவரத்துக் கழகப் புறநகர் கிளை முன் ஏஐடியுசி

போக்குவரத்துக் கழக ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி தஞ்சாவூர் கரந்தையில் உள்ள போக்குவரத்துக் கழகப் புறநகர் கிளை முன் ஏஐடியுசி சார்ந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் சுமார் 65 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தால் 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. 
எனவே, நடைமுறையில் உள்ள போக்குவரத்து ஓய்வூதிய நம்பகத்துக்கு மாதந்தோறும் கழகங்களில் இருந்து வரும் பணம் குறைந்து தற்போது காலாவதியாகி விட்ட நிலையில் உள்ளது. 
இதனால், 2016 டிசம்பர் முதல் ஓய்வூதியம் வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு பல்வேறு தொடர் போராட்டங்களின் காரணமாக அரசிடம் நிதி பெற்று வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு ஓய்வூதியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசிடம் நிதி பெற்று ஓய்வூதியம் வழங்குவது என்பது,  எந்த நேரத்திலும் நிறுத்தப்படக்கூடிய அச்ச நிலை உள்ளது. எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத் தலைவர் ஜெ. சந்திரமோகன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பி. அப்பாத்துரை, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், கெளரவத் தலைவர் மல்லி. தியாகராஜன், துணைத் தலைவர்கள் அ. பீர்தம்பி, எம். முருகையன், ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com