இளைஞர் கொலை வழக்கு: மறுவிசாரணையில் 4 பேருக்கு இரட்டை ஆயுள்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லபாண்டியன் மகன் வேல்முருகன்(17).  

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லபாண்டியன் மகன் வேல்முருகன்(17).  
கடந்த 2009 ஆம் ஆண்டு,  ஆவிக்கோட்டை விநாயகர் கோயில்  அருகே அதே ஊரைச் சேர்ந்த ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு சென்ற வேல்முருகன் இதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.  
இந்நிலையில்,  கடந்த 6.7.2009 அன்று இரவு கோயில் திருவிழாவையொட்டி  இன்னிசைக் கச்சேரி நடந்து  கொண்டிருந்தது. 
அதை பார்ப்பதற்காகச் சென்ற வேல்முருகனை ஸ்டாலின் (37) மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த  சண்முகம் (56), சிவதாஸ் (46), ராமதாஸ் (41) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டியும்,  கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். தடுக்கச் சென்ற வேல்முருகனின் அண்ணன் வீரமுருகனுக்கும் (22) அரிவாள் வெட்டு விழுந்தது.  
இச்சம்பவம் தொடர்பாக மதுக்கூர் போலீஸார் தொடர்ந்த வழக்கை விசாரித்த பட்டுக்கோட்டை 3-ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 26.2.2016-ல் ஸ்டாலினுக்கு ஆயுள் தண்டனையும்,  மற்ற மூவருக்கும் தலா  3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. 
இந்த தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழக்குமாறு பட்டுக்கோட்டையிலுள்ள 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. 
அதன்படி, பட்டுக்கோட்டை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெய ஆனந்த்,  வழக்கை விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com