தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததால், பல கிராமங்களில் சம்பா பருவ நெற் பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன. மேலும், இப்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயறு வகைப் பயிர்களும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வந்தன.
இந்நிலையில், மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
பாபநாசம் 3, திருவையாறு 4, அய்யம்பேட்டை 6, நெய்வாசல் தென்பாதி 1.8, வெட்டிக்காடு 3.8, பட்டுக்கோட்டை 8.5.
இதேபோல, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. மழை பெய்துள்ள இடங்களில் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநர் வ. பழனியப்பன் தெரிவித்தது:
இது பெரிய மழை இல்லை. என்றாலும், பெய்துள்ள இடங்களில் கோடை உழவு செய்வதற்கும், பசுந்தாள் உரப் பயிர் சாகுபடிக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல, உளுந்து, பயறு வகைப் பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கும் இந்த மழை பயன் அளிக்கும் என்றார் அவர்.
பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் இடைவெளி விட்டு மழை பெய்தது. இதேபோல, அதிராம்பட்டினத்திலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மிதமான குளிர்காற்றும் வீசியது. 
திருவோணத்தில்.... திருவோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. இந்த மழையானது கடலைச்செடிகள் படாமல் இருக்க உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com