தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் நவ. 1-ம் தேதி முதல் தொடர்ந்து இரு நாட்களுக்குப் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு 5 நாட்களுக்கு மழை இல்லை. இந்நிலையில், பல இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
மதுக்கூர் 9.4, அதிராம்பட்டினம் 6.2, திருவிடைமருதூர் 6, அணைக்கரை 5.8, மஞ்சலாறு 5.4, கும்பகோணம் 5, பட்டுக்கோட்டை 4.4, பாபநாசம், நெய்வாசல் தென்பாதி தலா 3, வெட்டிக்காடு 2.6, ஒரத்தநாடு 2.2.
இதேபோல, வியாழக்கிழமை பகலிலும் இடைவெளிவிட்டு விட்டு மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
அய்யம்பேட்டை 26, பாபநாசம் 22.2, மஞ்சலாறு 21, அணைக்கரை 19.6, திருவிடைமருதூர் 16, தஞ்சாவூர், வல்லம் தலா 15, திருவையாறு 10, திருக்காட்டுப்பள்ளி 6.4, நெய்வாசல் தென்பாதி 5.8, பூதலூர் 5.2, கும்பகோணம் 5, குருங்குளம் 3, கல்லணை 2, ஒரத்தநாடு 1.3.

பயிர்களுக்குச் சாதகம்

இந்த மழை பயிர்களுக்குச் சாதகமாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்தது: பெரிய அளவுக்கு மழை பெய்யவில்லை. தூறலாகத்தான் பெய்தது. என்றாலும், இந்த மழை மூலம் பயிர்கள் பசுமையாக மாற வாய்ப்பு உள்ளதால், யூரியா தேவை இருக்காது. சற்று பலமாகப் பெய்தால் பயிர்களில் உள்ள பூச்சிகளும் உதிர்ந்து விழும். இளம் பயிர்களுக்கு மிகவும் நல்ல மழை இது என்றார் நடராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com