அனுபவமிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு சான்று வழங்க வலியுறுத்தல்

அனுபவமிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் தொழில் பாதுகாப்புச் சான்று வழங்க அரசு

அனுபவமிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் தொழில் பாதுகாப்புச் சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஓமியோபதி சித்தா டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம், மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் உள்ளிட்ட ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு அங்கீகாரம் இல்லாத, தகுதியுள்ள அனுபவமிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவக் கழகச் சட்டப்படி அரசுப் பதிவு வழங்கச் சட்டத்தில் இடமில்லை. என்றாலும், தமிழ்நாட்டின் தாய் மருத்துவத்தை ஏழைகளுக்குக் குறைந்த செலவில் முற்றிலும் நோயைக் குணப்படுத்தும் சித்த மருத்துவத்தின் சேவையும், அனுபவமும் என்னென்றும் அழியாமல் பாதுகாக்கவும், பாரம்பரிய மருத்துவத் தொழிலில் பாதுகாப்புக் கிடைக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மூலம் மருத்துவத் தொழில் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சிலுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும். 
இதேபோல, சித்த மருத்துவத் துறையை ஒழுங்குபடுத்தி திறம்படச் செயல்படுத்த தமிழ்நாடு சித்தா மருத்துவ கவுன்சிலுக்கு தலைவர், உறுப்பினர்களைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் கே. பக்கிரிசாமி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் கே. சின்னையன், துணைத் தலைவர் சி. இன்பரசன், பொருளாளர் ஆர். ஸ்டீபன், துணைப் பொதுச் செயலர் ஜி. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com