இடி, மின்னலின்போது கணினி, தொலைபேசி பயன்பாடு வேண்டாம்

இடி, மின்னலின்போது தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற

இடி, மின்னலின்போது தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை, வெள்ளக்காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்து அக்கழகத்தின் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் த.நா. சங்கரன் தெரிவித்திருப்பது:
மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், மின் கம்பத் தாங்கு கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
மழையாலும், பெருங்காற்றாலும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், அதன் அருகே செல்ல வேண்டாம். அதுகுறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது திறந்தவெளியில் இருக்க வேண்டாம். அத்தருணத்தில் உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம், வீடு, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சம் அடையலாம்.
இடி, மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடைய வேண்டாம். மேலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும்.
இடி, மின்னலின்போது தஞ்சமடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும் திறந்தவெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.
அவசர காலத்தில் தொடர்பு கொள்ள...:
மழை, வெள்ளம் மற்றும் அவசர காலத்தில் கோட்டச் செயற் பொறியாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்கள்:
தஞ்சாவூர் - 9445853742, தஞ்சாவூர் நகரியம் - 9445853731, பட்டுக்கோட்டை - 9445853846, ஒரத்தநாடு - 9445853818, கும்பகோணம் - 9445853772, கும்பகோணம் வடக்கு - 9445853796.
உதவிச் செயற் பொறியாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
தஞ்சாவூர் 9445853744, தஞ்சாவூர் நகரியம் - 9445853732, புறநகர் - 9445853745, திருவையாறு - 9445853743, பட்டுக்கோட்டை நகரம் - 9445853850, பட்டுக்கோட்டை புறநகர் - 9445853848, மதுக்கூர் - 9445853847, பேராவூரணி - 9445853849, ஒரத்தநாடு நகரம் - 9445853819, ஒரத்தநாடு புறநகர் - 9445853820, சாலியமங்கலம் - 9445853821.
கும்பகோணம் நகரம் - 9445853773, புறநகர் - 9445853774, பாபநாசம் - 9445853775, கும்பகோணம் வடக்கு - 9445853797, கும்பகோணம் தெற்கு - 9445449278.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com