ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஒப்புக் கொண்டபடி சிறப்புக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பணியிடங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளை மூடும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் வியாழக்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது.
இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் அதிக அளவில் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.
இதையொட்டி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்.... கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சாந்தாராமன், நிர்வாகிகள் இளையராஜா, விஸ்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கும்பகோணம் ஒன்றியப் பகுதியிலுள்ள 128 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியிலுள்ள 80 சதவீதம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராவூரணியில்...
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் அ. நாவலரசன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி கோபி கிருஷ்ணா, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர்  மகேஷ் உள்ளிட்ட கூட்டமைப்பை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com