அனைத்து ஊராட்சிகளில்  பொது சுடுகாடு அமைக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் பொது சுடுகாடு அமைக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் பொது சுடுகாடு அமைக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் இந்த அமைப்பின் மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகள், இரு நகராட்சிகள், ஒரு மாநகராட்சி, 22 பேரூராட்சிகளில் பொது சுடுகாடு அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக் கோயில்களில் அனைத்து சாதியினர் வழிபடவும், சம உரிமை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட, அருந்ததிய சமூக மக்கள் வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மாவட்டத்திற்குள்பட்ட நகராட்சி, மாநகராட்சியில் புதை சாக்கடை குழியில் இறங்கி மனிதர்கள் வேலை செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரிக்கான மாணவர் விடுதியைச் சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பி. சம்பத், துணைத் தலைவர் எம். சின்னதுரை, மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம் ஆகியோர் பேசினர். முன்னதாக, வரவேற்புக் குழுத் தலைவர் அரங்க. சுப்பையா வரவேற்றார். முடிவில், செயலர் தை.செல்வமணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com