குறுகியகால கணினி பயிற்சிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்பு குறுகியகால கணினிப் பயிற்சிகளில்

தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்பு குறுகியகால கணினிப் பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என நிலைய முதல்வர் ஜெ.ரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: குறுகிய கால கணினிப் பயிற்சிகளான டி.சி.ஏ., டேலி 9.0, எம்.எஸ். ஆபிஸ் ஆகியவற்றில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 
பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோர் வசதிக்காக காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு இல்லை. தகுதி பெற்ற அனைவரும் சேரலாம். செய்முறை பயிற்சிகள், அதிநவீன கணினிகளைக் கொண்டும், கைதேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் உடனே நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்து கொள்ளலாம்.
இப்பயிற்சி பெறுபவர்கள் வசதிக்காக கணினி தட்டச்சு பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237426 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com