தமிழ்ச்சேரனார் முதலாமாண்டு நினைவஞ்சலி

பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் தமிழ்ப் புலவர் வி.தமிழ்ச் சேரனார் முதலாமாண்டு நினைவு அஞ்சலியையொட்டி

பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் தமிழ்ப் புலவர் வி.தமிழ்ச் சேரனார் முதலாமாண்டு நினைவு அஞ்சலியையொட்டி குரு பூஜை வழிபாடு, பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்ச் சேரனார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவர் எழுதிய ஆன்மிக நூலை வெளியிட்டார். முதல் பிரதியை முனைவர் மு.சிவசந்திரன் பெற்றுக் கொண்டார். 
தொடர்ந்து, பழ.நெடுமாறன் பேசியது: 
தமிழ்ச் சேரனார் தமிழுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். தமிழின் பெருமையைப் பாமர மக்களுக்குக் கொண்டு சென்ற பெருமை தமிழ்ச் சேரனாருக்கு உண்டு. தமிழுக்கும், தமிழ் இசைக்கும் அவர் மிகுந்த தொண்டாற்றினார் என்றார்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, கம்பன் கழகத் தலைவர் கவிஞர் முகிலன், ச.செளரிராஜன், பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர். 
மாலையில், மழையூர் சதாசிவம் குழுவினரின் திரு அருட்பா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை தமிழ்ச் சேரனார் குடும்பத்தினர் மற்றும் முத்தமிழ் பேரவையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com