ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்: சி.மகேந்திரன்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்றார் அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன்.

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்றார் அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரியும், காவிரி டெல்டாவை பாலைவனமாக்காதே என வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: 
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக இந்த மண்ணில் ஏமாற்றப்பட்ட வரலாறை அறிந்தால் வேதனையாக இருக்கிறது.  
இது, ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுகிறது. உலகில் வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நம்மை விட அதிகளவில் ஹைட்ரோ கார்பன் இருந்தாலும் கூட, அங்கு அத்திட்டம் ஏற்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் காவிரி டெல்டாவில் விவசாயிகளை ஏமாற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்.
 இங்கு மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இப்போது ஹைட்ரோ கார்பன், பெட்ரோலியப் பொருள்கள் எடுக்கப் போவதாகக் கூறுகின்றனர். ஆனால், எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எந்தத் திட்டமாக இருந்தாலும், பூமியில் 8,000 முதல் 10,000 அடி ஆழத்துக்கு நீரியல் விரிசல் முறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இது, பூமிக்கடியில் ஒரு பயங்கரவாதச் செயல் போன்றது. எந்தவொரு நல்ல நாடும் இத்திட்டத்தைச் செயல்படுத்தாது. 
எனவே, நாட்டையும், மக்களையும் அழிக்கும் திட்டத்துக்கு சமரசம் இல்லை. ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் போராட்டமாக முன்னெடுத்துச் செல்லும் என்றார் சி.மகேந்திரன்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வீ. கல்யாணசுந்தரம், பி.காசிநாதன், பொருளாளர் ந. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com