கல்லணைக் கால்வாயில் பேரிடர் மீட்பு செய்முறைப் பயிற்சி

சர்வதேச பேரிடர் குறைப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் படித்துறையில் பேரிடர் மீட்பு செய்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சர்வதேச பேரிடர் குறைப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் படித்துறையில் பேரிடர் மீட்பு செய்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, ரயிலடியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் வழியாகச் சென்ற பேரணி கல்லணைக் கால்வாய் கரையோரம் முடிவடைந்தது. பின்னர், வெள்ளம், பேரிடர் போது நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.
மாவட்ட வருவாய் அலுவர் ந.சக்திவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன், கோட்டாட்சியர் சி.சுரேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாபநாசத்தில்...
பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு செயல் விளக்கம், பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாணவர்கள் விநியோகித்தனர். 
தொடர்ந்து, நடைபெற்ற  விழிப்புணர்வு கருத்தரங்கில் முன்னாள் தீயணைப்பு  வீரர் அ.கலைவாணன் பேரிடர் மேலாண்மை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, பள்ளித் தலைமை செயலர் கே.திருஞான சம்பந்தம், நிர்வாக செயலர் கைலாசம், முன்னாள் செயலர் இளவரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் தலைமை ஆசிரியர் மு.சந்திரன் நன்றி கூறினார்.

பேராவூரணியில்...
பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ப் பயிற்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமை வகித்தார். பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் சித்தார்த்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றினால் எப்படி தீயை அணைப்பது, தீப்பற்றினால் செய்யக் கூடியவை, கூடாதவை, கோயிலில் விளக்கேற்றும் இடங்கள், சமையலறை மற்றும் மின்சாதனப் பொருள்கள் பயன்படுத்தும் இடங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர். கோயில் நிர்வாக அதிகாரி அமரநாதன், பேரூராட்சி தலைமை எழுத்தர் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள்  அசரப் அலி, சுப்பிரமணியன், பாண்டியராஜன்,  முடப்புளிக்காடு கிராமத்தார்கள், திருக்கோயில் பணியாளர்கள், குமரப்பா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள்  பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com