உயிர்நீத்த சீருடை பணியாளர்களுக்கு அஞ்சலி

பணியின் போது உயிர்நீத்த சீருடை பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பணியின் போது உயிர்நீத்த சீருடை பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணியின்போது உயிர்நீத்த போலீஸ் உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக். 21 ஆம் தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் பணியின்போது உயிர்நீத்த சீருடை பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. அங்குள்ள நினைவு ஸ்தூபிக்கு தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து 16 காவலர்கள் வரிசையாக நின்று 3 சுற்றுகள் வீதம் 48 குண்டுகளை முழங்கி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏடிஎஸ்பிக்கள் ரவிசேகர், பாலசந்திரன், ஸ்டாலின், டிஎஸ்பிக்கள் முருகேசன்(ஆயுதப்படை), ரவிசந்திரன் (நகரம்), ஜெயச்சந்திரன்(வல்லம்), காவலர்களின் குடும்பத்தினர், உயிர்நீத்த சீருடை பணியாளர்களின் வாரிசுகள், என்சிசி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com