அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.


தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
திமுக சார்பில் கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து அண்ணா சாலை வழியாகப் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதில், திமுக தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வர்த்தகர் அணி மாநிலத் தலைவர் சி.நா.மீ. உபயதுல்லா, மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி. இறைவன், தலைமைக் குழு உறுப்பினர் து. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, அதிமுக சார்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவிலிருந்து ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சாலை வழியாக அண்ணா சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலர் ஆர். காந்தி, முன்னாள் தொகுதி செயலர் துரை. திருஞானம், ஒன்றியச் செயலர் துரை. வீரணன், முன்னாள் நகரச் செயலர் வி. பண்டரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மேலும், கீழவாசலிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலப் பொருளாளர் எம். ரெங்கசாமி தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்டச் செயலர்கள் எம். சேகர், பி. ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட த்தலைவர் சி. அமர்சிங் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருவையாறில்...
திருவையாறு பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அண்ணா உருவப்படத்துக்கு ஒன்றியச் செயலர் இளங்கோவன், நகரச் செயலர் செந்தில் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல, திமுக சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காவேரி ஆற்றின் தென்கரையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் மாநகர மாவட்டத் தலைவர் ஜோதி, ஒன்றியச் செயலர் புனல் செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் நெப்போலியன் உள்ளிட்டோர் திருவையாறு பேருந்து நிலையத்தில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர்.
மதிமுக சார்பில் ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் ஒன்றியச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் திருவையாறு பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பட்டுக்கோட்டையில்...
அதிமுகவினர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெரியகடை வீதியிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகரச் செயலர் சுப.ராஜேந்திரன், ஒன்றியச்செயலர் பி.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுகவினர் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்திலிருந்து மாவட்ட துணைச் செயலர் கா.அண்ணாதுரை தலைமையில் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் ஏ.அப்துல்சமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல, மதிமுகவினர் நகரச் செயலர் எம்.செந்தில்குமார் தலைமையிலும், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராம், ஒன்றியத் தலைவர் ஏனாதி சி.மதன் ஆகியோர் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிராம்பட்டினத்தில்...
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், அதிரை பேரூர் செயலர் ஏ.பிச்சை மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில்...
கும்பகோணம் காந்தி பூங்காவிலிருந்து நகர செயலாளர் ராம. ராமநாதன் தலைமையில் ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் பிர்மன் கோயில் தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கும்பகோணம் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில் தாராசுரம் மார்க்கெட்டிலிருந்து மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று கடைத்தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல, நகர திமுக சார்பில் கட்சியின் மாவட்ட அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட திமுகவினர், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மகாமககுளத்தின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், நகர செயலாளர் சுப. தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணத்திலுள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலக வாயிலில் சங்க பொதுச் செயலாளர் எஸ். பாண்டியன் தலைமையில் அண்ணாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கெளதமன் தலைமையில் மகாமக குளம் கரையிலிருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆயிகுளத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சாரங்கபாணி சன்னதியில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வடிவேல்வாண்டையார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேராவூரணியில்...
அதிமுக சார்பில் எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமையில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. திருஞானசம்பந்தம், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி உ.துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம்  குழ.சுந்தரராஜன் உள்ளிட்டோர் சேது சாலையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் தலைமையில், முன்னாள் பேரூராட்சித் தலைவர்  என்.அசோக்குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் என்.செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள்அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் எஸ் . பாண்டியராஜன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.கபிஸ்தலத்தில்...
பாபநாசம்
மேலகபிஸ்தலம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட அதிமுக விவசாய பிரிவு தலைவர் அண்ணாமலை தலைமையில், முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமார், மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் எஸ்.மோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பேரணியாக சென்ற அதிமுக வினர் கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாபநாசம் ஒன்றிய நகர திமுக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்ற திமுகவினர் மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில், பாபநாசம் ஒன்றிய செயலாளர் கோ.தாமரைசெல்வன் மாவட்ட இணை செயலாளர் கோ.வி.அய்யாராசு உள்ளிட்டோர் முன்னிலையில் பாபநாசம் மேலவீதியிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com