ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டுமானப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டுமானப் பணியை விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்குப் பொதுப் பணித்


தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டுமானப் பணியை விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்குப் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே 13 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ. 35.39 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றப் புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தரை தளத்தில் 63,270 சதுர அடியில் 9 நீதிமன்றங்களும், முதல் தளத்தில் 29,376 சதுர அடியில் 9 நீதிமன்றங்களும், இரண்டாம் தளத்தில் 63,270 சதுர அடியில் ஏனைய அலுவலகங்களும் என மொத்தம் 1,55,916 சதுர அடியில் 18 நீதிமன்றங்களுக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் நடைபெறுவதைப் பொதுப் பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்குமாறு பொதுப் பணித் துறை அலுவலர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுப் பணித் துறைத் திட்ட இல்லத்தில் கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் நீர் அளவு குறித்தும், வெண்ணாறு மற்றும் காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறித்தும், பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் முதன்மைச் செயலர் கேட்டறிந்தார். கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்யுமாறு பொதுப் பணித் துறை நீர் வள ஆதார அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், சிறப்புத் தலைமைப் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன், செயற் பொறியாளர்கள் ரவிமனோகர் (கட்டடம்), முகமது இக்பால் (காவிரி), அசோகன் (வெண்ணாறு), திருவேட்டைசெல்வம் (அக்னியாறு), முருகேசன் (கல்லணைக் கால்வாய்) உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com