கும்பகோணத்தில் தூய்மைப்பணி

உலக துப்புரவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் சனிக்கிழமை ஒரு நாள் தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது.


உலக துப்புரவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் சனிக்கிழமை ஒரு நாள் தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது.
கும்பகோணத்திலுள்ள அனைத்து அரிமா சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், எக்ஸ்னோரா, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லுôரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இந்த முகாமை சிட்டி யூனியன் வங்கி பொது மேலாளர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் பீரீத்திசந்திரமோகன், ரோட்டரி சங்க நிர்வாகி சாய்ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் காவிரியாற்றிலிருந்து பிரியும் வாய்க்காலிலிருந்து தொடங்கி, மடத்துத் தெருவில் உள்ள குளம் வரையிலும், தொடர்ந்து பிடாரி குளம் வரை உள்ள வாய்க்கால்களிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து, கும்பகோணம் பகுதியில் 5 குழுவாகப் பிரிந்து பக்தபுரித் தெரு, வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, காசிராமன் தெரு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பூங்கா ஆகிய இடங்களில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் துôய்மைப்பணியை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதி மக்களுக்கு துôய்மையாக இருப்பது குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்தும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த தூய்மைப் பணிகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கரராஜ், சுவாமிநாதன், முருகானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லுôரி மாணவர்கள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com