கும்பகோணத்தில் பொறியாளர் தின விழிப்புணர்வு பேரணி

கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழிப்புணர்வு பேரணி கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழிப்புணர்வு பேரணி கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு சங்கத்தின் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். விழாக் குழு தலைவர் செந்தில்நாதன், செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை மண்டல தலைவர் காளிதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் மகாமக குளத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற 5-க்கும் மேற்பட்ட தனியார் தொழில்நுட்ப கல்லுôரி மாணவர்கள், நீர்நிலைகளையும், பாரம்பரியமான கட்டடங்கள், பழமையான கட்டடங்களை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.
முன்னதாக, காலையில் அரசு பொறியியல் கல்லுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனுப்பிரியா வரவேற்றார். மண்டல தலைவர் காளிதாஸ் விளக்கவுரை நிகழ்த்தினார்.
முதல்வர் கோபி மற்றும் தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் தலைமையுரை நிகழ்த்தினர்.
அரசு பொறியியல் கல்லுôரி மற்றும் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் இணைந்து பல்வேறு பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பொறியாளர் சண்முகநாதன் வழங்க, கல்லூரி மேலாண் இயக்குனர் அரவிந்த் பெற்றுக் கொண்டார்.
இதில் துணை முதல்வர் பாலமுருகன், சங்க பொருளாளர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com