ஒற்றைத் தீர்ப்பாயத்தை ரத்து செய்ய வேண்டும்

நதிநீர் பிரச்னைகளை விசாரிப்பதற்காக ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்க சட்ட முன் வடிவை கொண்டு வந்துள்ள மத்திய அரசு அதை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நதிநீர் பிரச்னைகளை விசாரிப்பதற்காக ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்க சட்ட முன் வடிவை கொண்டு வந்துள்ள மத்திய அரசு அதை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் மாநில விவசாயப் பிரிவுத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட காவரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
மாறாக, காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியாமல் தடுக்கும் நோக்கில், காவிரி நதிநீர் ஆணையத்தை கலைத்துவிட்டு, நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளைத்
தீர்ப்பதற்காக ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைக்க சட்ட முன்வடிவை இயற்றியுள்ளது.
வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது குடிநீருக்காக மக்கள் கடும் அவதிப்படும் நிலையும் உள்ளது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு பலமுறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை கர்நாடக
அரசு மதிக்காமல் செய்ல்பட்டு வருகிறது. தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசைக் கண்டிக்காது மத்திய அரசு உள்ளது.
ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி நதிநீர் பிரச்னை வழக்கை மீண்டும் தொடக்க நிலையிலிருந்து நடத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே ஒற்றைத் தீர்ப்பாய்த்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com